About Tamil Mandram

NPR பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் (NPRCET) ஒரு அங்கமான தமிழ் மன்றம், மாணவர்களிடையே மொழிப் பற்றையும் கலாச்சார விழுமியங்களையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.
(The Tamil Mandram at NPR College of Engineering & Technology (NPRCET) functions with the objective of nurturing language passion and cultural values among students.)

Purpose
  • கலாச்சார வேர் (Cultural Roots): மாணவர்களிடையே தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் மீது ஆழமான பிணைப்பை உருவாக்குதல்.
    (To create a deep-rooted connection towards Tamil language and culture among students.)
  • ஆளுமை வளர்ச்சி (Personal Development): மாணவர்கள் கலைத் திறமைகளை வெளிப்படுத்தவும் சமூக நலத் திட்டங்களில் ஈடுபடவும் ஊக்கப்படுத்துதல்.
    (To encourage students to express their artistic talents and engage in community welfare projects.)
  • தொடர்ச்சி (Sustainability): மாணவர்களின் பங்களிப்புடன் தமிழ் மொழியின் செழுமையை மேலும் விரிவுபடுத்துதல்.
    (To further enrich the glory of the Tamil language through student participation.)
  • ஆய்வு (Scholarly Engagement): தமிழ் இலக்கியம் மற்றும் மொழியியல் குறித்த புரிதலை மாணவர்களிடம் ஏற்படுத்துதல்.
    (To foster an understanding of Tamil literature and linguistics among students.)
Activities

பண்பாட்டு மரபுகளை அறிமுகப்படுத்துதல்
(Introducing Culture & Traditions)

தமிழ் கலாச்சார விழாக்கள் மற்றும் பாரம்பரிய பழக்கவழக்கங்களை அறிமுகப்படுத்துதல்.
(Organizing Tamil cultural festivals and familiarizing students with traditional customs.)

அறிவுத்திறன் மேம்பாடு
(Developing Intellectual Skills)

கவிதை, நாடகம், உரைநடை மற்றும் விவாதங்கள் மூலம் அறிவுத்திறனை வளர்த்தல்.
(Conducting poetry, drama, prose, and debates to enhance intellectual abilities.)

பக்தி மற்றும் சமூக விழிப்புணர்வு
(Promoting Devotion and Social Awareness)

தமிழ் இலக்கியத்தில் உள்ள நற்பண்புகளை வலியுறுத்துதல்.
(Highlighting the virtues embedded in Tamil literature.)

கலாச்சார நிகழ்வுகள்
(Cultural Events)

பாரதியார், பாரதிதாசன் போன்றோரின் பிறந்தநாளில் முத்தமிழ் நிகழ்ச்சிகளை நடத்துதல்.
(Organizing Muthamizh events on the birthdays of revolutionaries.)

மொழி பரப்புச் செயல்பாடுகள்
(Language Promotion Activities)

தமிழ் கற்றல் வகுப்புகள் மற்றும் உரையாடல்கள் மூலம் மொழி கற்றலை ஊக்குவித்தல்.

(Encouraging Tamil learning through classes and conversations.)

இலக்கியச் செயல்பாடுகள்
(Literary Activities)

கவியரங்கம், புத்தக வெளியீடு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்துதல்.
(Hosting poetry readings, book launches, and essay competitions.)

சமூக சேவை
(Social Service)

தொண்டு நிகழ்ச்சிகள் மற்றும் மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்துதல்.

(Conducting charity events and medical awareness programs.)

தனித்திறன் மற்றும் படைப்பாற்றல்
(Individual Talent and Creativity)

அரசியல் மற்றும் சமூகப் பொருளாதாரச் சிக்கல்களை மையமிட்டு படைப்பாற்றலை வளர்த்தல்.
(Fostering creativity focused on socio-economic issues.)